கொரோணாவை விட கொடிய தனியார் வைத்தியசாலை; அதிர்ச்சி விபரம்..!

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை நியூ ஆவடி சாலையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த வைத்தியசாலையில் அவரை அனுமதிக்கும் முன்பே கொரோனா நோயை குணப்படுத்த ரூ. 5 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற அதனை ஏற்றுக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அதற்கு பணம் செலுத்தினார்கள்.

அதன்பின்னர் அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு கொரோனா நோய் குணம் அடைந்துள்ளது. இருப்பினும் இருதய கோளாறு அவருக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளது மருத்துவமனை.

அதோடு அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் மேலும் 11 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 11 லட்சத்தை எப்படி செலுத்துவது என்று அவரது மனைவி கண்ணீர் விட்டு அழும் காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply