கச்சேரிக்குள் கஞ்சா வைத்து வியாபாரம் செய்த உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடியாக கைது..!

இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நீண்ட காலமாக மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply