வாக்குப்பெட்டியை கொள்ளையிட வந்தால் தலையில் சுட உத்தரவு; மகிந்த அதிரடி உத்தரவு..!

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிடவரும் நபர்களின் தலையில் துப்பாக்கியால் சுடுமாறு தன்னால் இம்முறை கூற முடியாது எனவும் தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் மேலும் இரண்டு பேர் இருப்பதால், அவர்களிடம் கேட்டே துப்பாக்கியால் சுட முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை போல் என்னால் இம்முறை தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாது. நாங்கள் மூன்று பேர் இருப்பதே இதற்கு காரணம். மூன்று பேரிடமும் கேட்ட பின்னரே எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும் எனக் கூற முடியும்.

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்கள். ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணி விட்டு சுட வேண்டும். உயிர் சேதங்கள் ஏற்படும் படியான சம்பவங்களாக இருந்தால் உடனடியாக சுட வேண்டும்.

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்ல வரும் நபரை எடுத்துச் செல்ல வேண்டாம் என முதலில் எச்சரியுங்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply