வடக்கில் (27) நாளை மின்சாரம் தடைப்பட உள்ள பகுதிகளின் விபரங்கள்..!

உயர்அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கில் பல பிரதேசங்களில் நாளை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8மணியிலிருந்து மாலை 5 மணி வரை யாழ் மாவட்டத்தில்- மருதனார்மடம் சந்தியிலிருந்து கொக்குவில் செம்பியன் லேன் வரை, இணுவில், மருதனார்மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, பாலாவோடை, இணுவில் கந்தசுவாமி கோயில், துரைவீதி, உப்புமடம் சந்தியிலிருந்து கோண்டாவில் புகையிரத நிலையம் வரை, முத்தட்டு மடம் வீதி, தாவடி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், விஜிதா மில் பிரதேசம், தாவடி ஆகிய பிரதேசங்களிலும் தடைப்படும்.

அதேபோல வவுனியா மாவட்டத்தில்- புளிதறித்த புளியங்குளம் கிராமம், அரபா நகர், செல்வநகர் கிராமம், செக்கட்டிப்புலவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply