இலங்கையில் பஸ்ஸினுள் அமெரிக்கப்பிரஜை திடீர் மரணம்; கொரோணா என சந்தேகம்..!

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியினுள் அமெரிக்கப் பிரஜை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அமெரிக்கப் பிரஜை நிட்டம்புவ – யக்கல பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியில் உட்பிரவேசித்துள்ளார்.

இதனையடுத்து பஸ் நடத்துவரிடம் வண்டியில் பயணித்த ஏனைய பயணிகள் பேசிவந்த நிலையில், திடீரென குறித்த வெளிநாட்டுப் பிரஜை மரணித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்ரனர்.

அதோடு உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்ற பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றதுன.

Be the first to comment

Leave a Reply