பாடசாலை நேரங்களில் திடீர் மாற்றங்கள்; கல்வி அமைச்சு அறிவிப்பு..!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் அந்தந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply