கோடிகளில் புரளும் கூட்டமைப்பு உறுப்பினர்கள்; கொட்டகையில் வசிக்கும் முன்னாள் போராளிகள்..!

கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் எப்படி வந்தது?

“செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது?

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஞா.குணசீலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரச வேட்பாளர்களுக்குச் சமமான அளவிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோடிக்கணக்கான பணத்தை இந்தப் பொதுத்தேர்தலில் செலவு செய்கின்றார்கள்.

செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அந்தப் பணத்தை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்?

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தபோது மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு இன்று மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள்.

இவர்களுக்கு இம்முறை மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்கள் ஆணையுடன் நாம் நாடாளுமன்றம் சென்றால் நீதியின் வழியில் சேவையாற்றுவோம். மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்போம்” – என தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply