தனிமைப்படுத்தலை தவிர்த்து நடமாடும் 3 அரசியல்வாதிகள்; தொற்று இருக்கலாம் என சந்தேகம்; மக்களே அவதானம்..!

ராஜாங்கன பிரதேசத்தில் மரண வீடு ஒன்றிற்கு சென்ற அரசியல்வாதிகள் நால்வரில் மூவர் சுயதனிமைப்படுத்தப்படாமல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகர் கலந்து கொண்ட மரண வீட்டிற்கு சென்ற அரசியல்வாதிகள் நால்வரில் மூவர் சுயதனிமைப்பபடுத்தப்படாமல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அந்த மரண வீட்டில் அரசியல்வாதிகள் நான்கு பேர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏனைய மூவர் இதுவரையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்கள் அடங்கிய வர்த்தமானியில் குழப்பமான நிலை உள்ளது. கொரோனா உட்பட தொற்று நோய் தடுப்பு பிரிவு கடமைகளில் இருந்து விலகியிருக்கும் பரிசோதகர்கள் இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அதற்கு தீர்வு இல்லை என்றால் இதனை விடவும் மிகப்பெரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply