இலங்கையில் திட்டமிட்டு மறைக்கப்படும் கொரோணா தொற்று விபரங்கள்..! அம்பலமான உண்மைகள்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை அரசு மறைக்கின்றது என ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அரசு வாக்குவேட்டைக்காகப் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தேர்தலை நடத்தும் நோக்கம் காரணமாக சுகாதாரம் புறக்கணிக்கப்படுகின்றது. இதுவே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமாகயிருக்கலாம்,

அரசியல்வாதிகள் சுகாதாரத்தை ஆதிக்கம் செய்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வுகூடத்தால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பில்லை என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸைத் தோற்கடித்த உலகின் முதல் நாடு இலங்கை எனக் காண்பிப்பதற்காக உண்மைகள் மறைக்கப்படுகின்றன” – என்றார்.

Be the first to comment

Leave a Reply