இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு..! இலங்கையின் எதிர்காலம்..!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத் தொற்றுடன் தொடர்புடையவர் மற்றும் நாடு திரும்பியவர்கள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்யை தினம் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய மேலும் 3 பேருக்கும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து திரும்பிய 2 பேருக்கும் கந்தகாடு முகாம் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த கண்டி குண்டக சாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் 3 பேருக்கு தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நேற்றைய தினம் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2674 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 13 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 662 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply