அரச விடுமுறை மற்றும் ஊரடங்கு தொடர்பாக அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறவிப்பு..!

ஊரடங்கு மற்றும் அரசாங்க விடுமுறை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் முக்கிய அறிவ்பொன்றை விடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு வழங்குவது மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து அரசாங்கத்தினால் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு மற்றும் அரசாங்க விடுமுறைகள் குறித்து சமூகத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர் அது குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களது எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிதது வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply