யாழில் 94 பேருக்கு கொரோணா பரிசோதனை ; 2 பேருக்கு தொற்று உறுதி..!

யாழ். போதனா வைத்தியாசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) 94 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 55 பேர், பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 32 பேர் (இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது), யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 4 பேர், கிளிநொச்சி படையினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply