மீண்டும் கொவிட்-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; அனைத்து பாடசாலைகளையும் இடைநிறுத்துவதாக அறிவிப்பு!

மீண்டும் கொவிட்-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அனைத்து பாடசாலைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங் அறிவிப்பு!

ஹொங்கொங்கில் சமூக தொற்று பரவல் இருப்பதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இடைநிறுத்துவதாக கல்வி பணியகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஆசிய நிதி மையத்தில் உள்ள பாடசாலைகள், பெரும்பாலும் பெப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டுள்ளன.

ஆனால் பலர் இணையவழி மூலமாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பல சர்வதேச பாடசாலைகள் ஏற்கனவே கோடை விடுமுறையில் உள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) நகரத்தில் 42 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 34 உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளன. இது தொடர்ச்சியான இரண்டாவது நாளான உள்ளூர் அதிகரிப்பைக் குறிக்கிறது.

அண்மையில் நடந்த சில தொற்றுகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்டதாக கல்விச் செயலாளர் கெவின் யியுங் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply