சிறிதரனுக்கு எதிராக பாயும் தேர்தல்கள் ஆணைக்குழு..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட கள்ளவாக்கு விவகாரத்தில், யாராவது உரிய வகையில் முறைப்பாடு செய்தால், சிறிதரன் கைது செய்யப்படும் நிலை உருவாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் 75 கள்ளவாக்கிட்டதாக சி.சிறிதரன் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் விதமாக சிறிதரன் நூதனமாக கருத்து தெரிவிக்கிறார் என சமூக ஊடகங்களில் விமர்சனம் கிளம்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது தேர்தல் ஆணையாளரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும்போது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சிறிதரன் விவகாரம் பற்றி தற்போதுதான் கேள்விப்படுகிறேன் என்றும், இந்த விடயம் தொடர்பில் உறுதியான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டால் அவரை கைது செய்து விசாரிக்கும் நிலைமை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டு வந்தபோதும், தற்போதுதான் இந்த விடயம் தொடர்பில் அறிகிறேன் எனக் கூறிய அவர்,

ஆனந்தசங்கரியும் இது தொடர்பில் பல முறை குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.

எனவே இந்த விடயம் பற்றி யாராவது முறையிட்டால் விசாரணை மேற்கொள்வோம் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply