பாலியல் பலாத்கார வழக்கின் கீழ் சிறுவன் ஒருவன் கைது..!

பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Dunkerque (Nord) நகரில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளதாக அறிய முடிமிறது. விசாரணைகளை ஆரம்பித்துள்ள Dunkerque நகர அரச வழக்கறிஞர் அலுவலகம், முதற்கட்டமாக சிறுவனை காவல்நிலையத்தில் தடுத்து வைக்க பணித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் குறித்த சிறுவனும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் என்பதால், இந்த வழக்கை நேரடியாக பாலியல் பலாத்கார வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வார திங்கட்கிழமை இந்த பலாத்கார முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply