கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைமாணி பட்டப்படிப்புகளுக்கு செய்முறைத் திறன்காண் பரீட்சைக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் 2019, 2020ம் கல்வியாண்டுக்கான கர்நாடக சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புல தொழில்நுட்பக் கலைகள் நுண்கலைமாணி பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சைக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத்திகதி எதிர்வரும் 12.07.2020 மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இச் செய்முறைத் திறன்காண் பரீட்சை தொடர்பான விபரங்களை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேலதிக விபரங்களுக்காக சிரேஸ்ட உதவிப் பதிவாளரை 065-2222663 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் 2017ஃ2018ம் கல்வியாண்டின் மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டு நடனத்துறை மற்றும் கட்புல தொழில்நுட்பக் கலைத்துறை மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 13.07.2020 (திங்கட்கிழமை) தொடக்கம் நடைபெறவுள்ளன.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மேற்படி மாணவர்கள் 12.07.2020ஆம் திகதி விடுதிக்கு சமூகமளிக்க முடியும் என பிரதிப்பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply