மண்டியிட்டது சீனா; அமெரிக்காவின் கை ஓங்கியது..! விபரம் உள்ளே..!

வேறு வழியில்லை: அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா!

கொரோனா தொற்று மற்றும் ஹொங்காங்கில் சீன ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஒருபோதும் அமெரிக்காவை சீனா எதிரியாக பார்க்கவில்லையென சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப்போர் மோதலாக வெடித்துள்ளது.

வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணமென அமெரிக்கா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தென்சீனக் கடல் பகுதியில் போர்ப்பதற்றமாகவும் உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளிடையே ஆரம்பகாலம் தொட்டே பனிப்போர் நீடித்துவரும் நிலையில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் இரு நாடுகளும் கடுமையான சவாலை எதிர்கொள்கின்றன.

விரைவில் சீனாவை அமெரிக்கா புரிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். கருத்தியல் சார்பு காரணமாக சில அமெரிக்கர்கள் சீனாவை ஒரு எதிரியாகவே பார்க்கின்றனர்.

சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் சீன அமெரிக்க உறவுகளை தடுக்கவும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கின்றனர்.

அமெரிக்காவுடன் சவால் செய்யவோ, அதை எதிர்க்கவோ சீனாவுக்கு எந்த நோக்கமும் இல்லை. சீனா அமெரிக்காவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறதென அவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply