வெலிக்கடைச்சிறையில் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி; எப்படி சாத்தியம்..?

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கைதி கந்தக்காடுவில் அமைந்துள்ள போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply