யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு..!

யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் 50இற்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் கிடைத்த நிலையில் சோதனையிட வந்ததாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “உங்களுக்குக் கிடைத்தது தவறான தகவலாக இருக்கலாம். அல்லது எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காகவும் பொதுமக்களை எமது அமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்கச்செய்வதற்காகவும் இதனை வேண்டுமென்றே நீங்கள் செய்திருக்கலாம்” என கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாங்கள் மேலிடத்து உத்தரவை மட்டுமே நடைமுறைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply