சுமந்திரனின் அடாவடியை அடக்கிய மாவை; இன்று சந்திக்கு வந்த கூட்டமைப்பின் குடும்ப ரகசியம்..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பதவி வகிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று பகல் 11 மணி முதல் இடம்பெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த சுமந்திரன் தனது கைகளில் ஒரு கட்டு உதயன் பத்திரிகைப் பிரதிகளைக் கொண்டு வந்து அங்கு வருகை தந்தவர்களிற்கு வழங்கியதுடன் , கூட்ட ஏற்பாட்டு ஒழுங்கை சீர்குலைத்து ஆத்திரத்தடன் கதைத்துக் கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்த நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு சுமந்திரனை நோக்கி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

கூட்டத்தை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம் என்றும் தலைவர் மாவை உத்தரவிட்டும் அதனையும் மீறி “நான் கொடுப்பேன்” என பத்திரிகையை சுமந்திரன் கொடுத்தமை அங்கு வருகை தந்த தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு வழமையாக தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக சுமந்திரன் சதி நடவடிக்கையில் ஈடுபட்டு, அவை அனைத்தும் அம்பலத்திற்கு வந்த நிலையில், இப்படி ஒழுக்கமில்லாமல்அவர் நடந்து கொள்வது தமிழ் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமல்ல என சுட்டிக்காட்டிய ஆதரவாளர்கள் , அவர் மீது தலைமை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

அத்துடன் மண்டபத்திலிருந்த கூட்டமைப்பு உள்ளூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைமைக்கு கட்டுப்படாத சுமந்திரனின் உண்மை முகம் இதன்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது. 

இந்த நிலையில் சுமந்திரனால் தமிழ் இனத்துக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மிக கட்டுப்பாட்டுடன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட்டங்களை நடாத்தியதுடன் சுமந்திரனின் வாயையும் மூடியுள்ளமை தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading video

மேலும் கூட்டம் தொடர்பில் தெரிய வருவதாவது….

கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஏனைய 9 வேட்பாளர்களும் தலா 3 நிமிடம் உரையாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

மாவை சேனாதிராசா உரையாற்றிய போது, கட்சிக்குள் சுமந்திரன் தரப்பும், சரவணபவன் தரப்பும் மோதிக் கொண்டிருப்பதை- பகிரங்கமாக பெயர் சொல்லாமல்- குறிப்பிட்டு, அனைத்து தரப்பும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்றார்.

த.சித்தார்த்தன் உரையாற்றிய போது, தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் மோதலை சுட்டிக்காட்டினார். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கு வேட்பாளர்கள் முனைகிறார்கள். பேஸ்புக், பத்திரிகைகளில் மற்ற வேட்பாளரை அவதூறு செய்கிறார்கள். இதன் மூலம் எதிராளியை வீழ்த்தலாமென நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியே சிதைவதாக சுட்டிக்காட்டியதுடன் , ஒருவரையொருவர் அவதூறு செய்யாமல் பிரச்சார பணிகளில் ஈடுபட வேண்டுமென ஆலோசனை சொன்னார்.

அவர் பேசிய விடயங்களை கருத்தில் எடுத்தாரோ என்னவோ, மேடையிலேயே தாக்குதலை ஆரம்பித்தார் சுமந்திரன். சித்தார்த்தன் தொடர்பாக தாக்கும் விதமான மேடையில் சில கருத்துக்களை அவர் தெரிவிததார்.

இதையடுத்து உரையாற்றி எழுந்த கஜதீபன் அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார். சுமந்திரன் 5 வயதில் கொழும்பு போய், 48 வயதில் திரும்பி வந்துள்ளார். அவருக்கு இந்த மண்ணின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை யாழ் மாவட்ட வேட்பாளரான உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவன் நிகழ்வு ஆரம்பித்து சற்று தாமதமாகவே அங்கு வருகை தந்த நிலையில், நிகழ்வு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே உடல் நல குறைவு காரணமாக உரையாற்றாமல் சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply