தமிழரசுக்குள் மோதல் உச்சக்கட்டம்; உதயன் பத்திரிகையும் சுமந்திரனும் பொது வெளியில் இன்று கொட்டித் தீர்ப்பு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (04) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.

கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கினார்.

தமிழ்த் தேசியத்தைக் காக்க சுமந்திரனைத் தோற்கடிப்போம்” என்று பிரதான தலைப்பிட்ட செய்தி இன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைச் செய்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்ப்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர்,

“ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் இயக்குநருமான சரவணபவன் மற்றும சுமந்திரனுக்கிடையில் பனிப்போர் நிலவிவருகின்றது.

இதனால், சுமந்திரன் தனக்கு ஆதரவாகச் செயற்பட சரவணபவனின் மைத்துனரை (வித்தி) கைக்குள் போட்டு அவர் ஆசிரியராகச் செயற்படும் பத்திரிக்கையைக் கைக்குள் போட்டுள்ளார்.

இந்நிலையில், உதயன் பத்திரிகை சுமந்திரனுக்கு எதிரான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பத்திரிகையின் செய்தியை தனக்கு எதிராகச் செயற்படும் சரவணபவனின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில், சுமந்திரன் தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி குறித்த பத்திரியையை தனது கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு விநியோகித்துள்ளார். இந்தச் செயற்பாடு கூட்டமைப்புக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.” எனப் புலம்பித்தள்ளியுள்ளனர்.

சுமந்திரன் மற்றும் சரவணபவன் இருவரும் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply