சுமந்திரன் மற்றும் சிறிதரன் தொடர்பில் மூத்த முன்னாள் பேராளி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

தேசியத் தலைவரை நேசிக்கும் – கூட்டமைப்பை ஆதரிக்கும் மக்கள் சுமந்திரன் மற்றும் சிறிதரனுக்கு வாக்களிக்க வேண்டாம்! மூத்த போராளி காக்கா உருக்கம்.

தேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரன் மற்றும் சிறிதரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மூத்த போராளியும், மாவீரன் ஒருவரின் தந்தையுமான காக்கா (முத்துக்குமார் மனோகர்) பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியோ, தவறோ அதற்கு வாக்களிப்பது எமது கடமை என கணிசமானவர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறனவர்களுக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடும் வாக்காளர்களின் சுமந்திரனைத் தவிர வேறு யாராவது மூவருக்கு வாக்களிக்குமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் லெப்.கேணல் திலீபன், பிரிகேடியர் தீபனின் சகோதரர் பெற்றோர் உட்பட அனைத்து மாவீர்ரகளின் பெற்றோர்கள் மற்றும் போராளிகளின் உறவினர்கள் அனைவரும் இவர்களை தோற்கடிக்க வேண்டுமெனவும் சூசகமாக அவர் கூறியுள்ளார். 

Be the first to comment

Leave a Reply