இலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!

இலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, வரலாற்றில் இல்லாதளவு உச்ச விலையைத் தொட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789 டொலராக காணப்படுகின்றது.

அதன்படி கடந்த ஜூன் 18 ஆம் திகதியிலிருந்து இன்று வரை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஆயிரத்து 722 டொலரில் இருந்து ஆயிரத்து 789 டொலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply