விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்தது ஐரோப்பிய ஒன்றியம்..!

பாகிஸ்தானில் 260க்கும் மேற்பட்ட விமானிகள் மோசடியாக தேர்ச்சி பெற்று விமானிகளாக வேலை செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச விமானங்களை இயக்கி வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் விமானிகளுக்கு ஏற்கனவே வியட்நாம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இன்று முதல் தொடங்கியுள்ள இந்தத் தடை 6 மாதங்களுக்கு நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய வான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது கவலைகளை வெளியிட்டு விரைவில் தடை நீங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply