அரச ஊழியர்களுக்கு ஜீலை 5 முதல் புதிய போக்குவரத்து திட்டங்கள்..!

அரச நிறுவனங்களில் ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் நெகிழ்வு போக்குவரத்துத் திட்டமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட சேவையை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஜூலை மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர்,  பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பொதுப் போக்குவரத்தில்  பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான நெகிழ்வு போக்குவத்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply