திடீரென பங்குச் சந்தை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள்; தொடரும் பதற்றம்..!

பாக்கிஸ்தான் – தெற்கு நகரமான கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டடத்தின் பிரதான வாயிலில் குண்டு வீசிய பின்னர், தாக்குதல்தாரிகள் கட்டடத்தை தாக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, துப்பாக்கிதாரிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் தொடர்கிறது என்றும் பாக்கிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சர்வதேச ஊடகங்களால் செய்தி வெளியிட்டுள்ளது.

எத்தனை பேர் தாக்குதல் நடத்தியவர்கள் அல்லது அவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமை ‘இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது’ என்று பாகிஸ்தான் பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இயக்குனர் ஆபிட் அலி ஹபீப் கூறுகையில்,

துப்பாக்கி ஏந்தியவர்கள் வாகன தரிப்பிடத்திலிருந்து வந்தே துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என கூறினார்.

இதன் காரணமாக கட்டடத்தின் உள்ளே இருந்தவர்கள் கட்டடத்தின் பின்புற வாசலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply