ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்..!

An injured Sri Lankan woman lays on a stretcher at a hospital following an explosion at a church in Batticaloa in eastern Sri Lanka on April 21, 2019. - A series of eight devastating bomb blasts ripped through high-end hotels and churches holding Easter services in Sri Lanka on April 21, killing nearly 160 people, including dozens of foreigners. (Photo by LAKRUWAN WANNIARACHCHI / AFP) (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP via Getty Images)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை அவர் குடும்பதினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இவர் காயமடைந்த 36 வயதான திலின ஹர்ஷினி என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு வீடு திரும்பியுள்ளார்.

இவர் நடன ஆசிரியராவார். தாக்குதலில் இவரின் முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய போதிலும், பூரண குணமடையவில்லை, சில பகுதி உணர்வற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது இடது கண் அகற்றப்பட்டுள்ளது. விரல்கள் சரியாக செயற்படாமலுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, அவரும் மூன்று பிள்ளைகளும் தேவாலயத்தில் இருந்த நிலையில், அவரது ஆறு வயதுடைய இரண்டாவது மகன் தாக்குதலில் உயிரிழந்தார். மற்ற இரு பிள்ளைகளும் காயமடைந்து, குணமடைந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் பலத்த காயங்களுடன் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தனியார் வைத்தியசாலையொன்றில் பல அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply