சுகாதார வழிகாட்டல்களைப்பின்பற்றாவிடில் நாளை முதல் தண்டிக்கப்படுவீர்கள்..!

நாட்டில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிகபப்ட்டுள்ளது.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply