வெடித்தது புதிய சிக்கல்; கருணாவிற்கெதிராக களம் இறங்கியது ஐ.நா..!

சிறுவர்களை படையில் இணைத்தமை குறித்து கருணாவிடம் விசாரணை நடாத்த வேண்டும்! ஐநா மனித உரிமை ஆணையம்

சிறுவர்களை படையில் இணைத்தமை குறித்து கருணாவிடம் விசாரணை நடாத்த வேண்டும்! ஐநா மனித உரிமை ஆணையம்

சிறுவர்களை படையணியில் இணைத்துகொண்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவை விசாரணை செய்யவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையம் தனது டுவிட்டர் பதிவில் இதனை கூறியுள்ளது. அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த கால குற்றங்களிற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா விசாரிக்கப்படுகின்றர் என்பது கவனத்தில் எடுத்துள்ளோம்.

இந்நிலையில், சிறுவர்களை படையணியில் இணைத்துக்கொண்டமைக்காக அவரை விசாரணை செய்யவேண்டும்.

அது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றச்செயலாகும். பொறுப்புக்கூறுதல் என்பது இலங்கையில் அனவைருக்கும் பிரயோகிக்கப்படவேண்டும்” என மனித உரிமை ஆணையம் மேலும் கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply