கொரோனா தொற்று இருப்பதை அறிந்துகொண்டதும் தூக்கில் தொங்கிய வர்த்தகர்…!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அல்வா விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவானது.

தஞ்சை மாவட்டத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு அல்வா விற்பனை நிலையத்தின் உரிமையாளரே ஹிரிசிங் ஆவார்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இந்த வர்த்தக நிலையம் புகழ்பெற்றிருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரிசிங் உடல் நலைக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு காணப்படுவதாக மருத்தவர்கள் அறிவித்தனர்.

அத்துடன் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதணைகளின் போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரிசிங்கால் தனக்கு கொரோனா தொற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் ஹரிசிங்.

மற்றவர்கள் மத்தியில் இருந்து தம்மை ஒதுக்கி வைத்திருப்பது போல ஒரு எண்ணம் ஹரிசிங்கின் மனதில் தோன்றியது.

தனிமையின் பிடியில் வாடிய இவரது மனதுக்குள் பல அச்சங்கள் தோண்றியது.ஒரு நாள் யாரும் இல்லாத நேரம் தனி அறையில் தூக்கிட்டு ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது இந்த தற்கொலை நடவடிக்கைக்கு அவரது மனநிலையே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply