கைகளுக்கு வரும் பேராபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

கொரோனா தொற்றிக் கொள்ளாமல் இருக்க அடிக்கடி கைகளில் பூசிக் கொள்ளும் Gel hydroalcoolique(கிருமி நீக்கி) மருந்து கடும் வெப்ப காலத்தில் கைகளை பாதிக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

வெப்பகாலம் தொடங்கியுள்ள நிலையில் கிருமி நீக்கி மருந்தினை பூசிக் கொள்ளுதல் கைகளுக்கு எரிவையும், அடையாளங்களையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடற்கரைகளை சூரியக்குளியலை விரும்புகின்றவர்கள் கிருமி நீக்கி மருந்தினை பாவித்துக் கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்குப்பதிலாக கைகளை குளிர்மையான நீரினால் சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளுதல் நன்று என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply