24 மணி நேரத்தில் விலை குறைப்பு; சஜித் தெரிவிப்பு..!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்து 24 மணி நேரத்திற்கு முன்னர் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதிமொழி அளித்துள்ளார்..

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.இதன்போது தேர்தலில் வெற்றிபெற்று அரசு அமைத்து 24 மணி நேரத்தில் எரிபொருள் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்தபோதிலும் , அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் காரணமாக இலங்கையில் எண்ணெய் விலை குறைக்கப்படவில்லை.

தான் அரசாங்கத்தை அமைத்ததன் பின் பொருளாதாரம் மீட்டெடுக்கும் வரை ஏழைகளுக்கு வழங்கப்படும் 20,000 கொடுப்பனவு பணக்காரர்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply