அமெரிக்காவில் இருந்து வவுனியாவை வந்தடைந்த பெருமளவானோர்..!

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 217 இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நேற்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 49 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரொனோ வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலமாக குறித்த பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply