யாழ் நகரில் 4 நகைக்கடை உரிமையாளர்கள் அதிரடியாக கைது..!

யாழ்ப்பாணம் மத்திய நிலையத்தில், நகைக்கடைகளை வைத்திருக்கும் 4 உரிமையாளர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள்.

குறித்த கடை உரிமையாளர்கள் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததோடு மட்டுமல்லாது நகைகள் திருடும் திருடர்களுக்கு மேலும் உதவிகள் செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சமீபத்தில் யாழுல் நகைத் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கிய நிலையில், களவெடுக்கும் நகைகளை விற்க்கும் நகை கடையைக் காட்டி உள்ளார்.

இதனை அடுத்து நடந்த மேலும் ஒரு விசாரணையில் மேலும் 3 நகைக்கடை உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை யாழில் உள்ள சில நகைக்கடை உரிமையாளர்கள், திருட்டு நகைகளை வாங்குவதன் காரணமாகவே திருடர்களும் அதிகரித்துச் செல்வதாக யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply