சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக வாக்கு கொடுத்த ஶ்ரீதரன்..! குட்டு வெளிப்பட்டதா?

அண்மையில் பிரான்ஸிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மிகவிரைவில் சுமந்திரனை அரசியலில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அங்குள்ள புலம்பெயர் மக்களிடம் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரனான எம்.ஏ. சுமந்திரனை தேர்தல் முடிந்தவுடன் கட்சியைவிட்டு நீக்குவதாக சிறிதரன் அங்குள்ளவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பிரான்ஸில் உள்ள நம்மவர்கள் சிறிதரனுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடபிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக மனிதநேய செயற்பாட்டளாரன கஜன் என்பவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply