சஜித்தால் வழங்கப்பட இருந்த மருத்துவ உபகரணங்களை அள்ளிச்சென்ற ஆணைக்குழு..! ஏன் தெரியுமா..?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் இன்று நடைபெறவிருந்த ஒரு விழாவை இரத்துச் செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொல்கஸ்ஸோவிட வேதர மாவட்ட மருத்துவமனைக்கு இதய பரிசோதனைக்காக சுமார் 37 இலட்சம் பெறுமதியுள்ள உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது அங்கு வருகைத்தந்த மொரட்டுவ பகுதி உதவி காவல்துறை அதிகாரி, தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பை அமைப்பாளர்களுக்கு வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும், வேட்பாளர்கள் பங்கேற்காமல் உபகரணங்கள் மருத்துவமனைக்கு தானம் செய்ய முடியுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த உத்தரவுக்கு இணங்காத அமைப்பாளர்கள் உபகரணங்களை மீண்டும் எடுத்துச் சென்றன.

Be the first to comment

Leave a Reply