அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனைக்கான தேர்தல் பணிமனை திறப்பும் பொதுக்கூட்டமும்..!


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் ஏழாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான வை.கே.றகுமான் (ஜே.பி) அவர்களை ஆதரித்து 
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா அவர்களின் தலைமையில் தேர்தல் பணிமனை திறப்பும் பொதுக்கூட்டமும் நேற்று (22) இரவு மருதமுனை அல்-மனார் வீதியில் நடைபெற்றது. 

இப்பொதுக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் சிரேஷ்ட சட்ட முதுமாணியுமான முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட், 
முன்னாள் பிரதியமைச்சரும் 
கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்றூப், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தவிசாளருமாகிய அமீர் அலி, வேட்பாளர்களான நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், கனிபா மதனி கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான முபீத், சிபான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் இதன் போது பல மாற்றுக் கட்சியினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையின் கரங்களைப் பலப்படுத்த இணைந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறப்பு வைத்தார். இதன் போது 7ஆம் இலக்க வேட்பாளர் 
வை.கே.றகுமான் (ஜே.பி) 
உரையாற்றினார்.

Be the first to comment

Leave a Reply