மஹிந்தவிற்கு கடும் தலையிடி; உறவுக்காரர் தேர்தலில் போட்டியிடுவதாலாம்..!

இம்முறை பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க போட்டியிடவுள்ளார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தெனியாய, கொட்டபொல பிரதேசத்தில் வேட்பு மனு பிரச்சினை காரணமாக 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வரை தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply