வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ள அவர், தொழிற்சந்தைக்கு தேவையான விதத்தில் பல்கலைகழகங்களிலிருந்து படித்தவர்கள் உருவாகுவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காக புதிய கல்விக் கொள்கைக்கு அமைய இலட்ரோனிக் தொழில்நுட்பம் உட்பட தொழில்நுட்ப பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply