இலங்கையில் PCR பரிசோதனைக்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

ஆகஸ்ட் 1 முதல் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்பு வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு 65 அமெரிக்க டொலர் அறவிடப்படும். என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் 24 மணி நேரம் தங்க வேண்டியிருக்கும் அறிக்கை எதிர்மறையாக negative, இருந்தாலே அவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தில் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

சுகாதார திட்டப்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த வாரம் இறுதி செய்யப்பட்ட 70 பக்க வழிகாட்டுதலில் நடவடிக்கைகள் தயார்செய்யப்பட்டுள்ளன.

வழிகாட்டுதலின் படி, சுற்றுலாப் பயணிகள் குறைந்தது ஐந்து இரவுகளாவது நாட்டில் தங்க வேண்டியிருக்கும், மேலும் தங்கியிருக்கும் ஐந்தாவது நாளில் மற்றொரு கட்டாய பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், என்றார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழைப் பெற்ற ஹோட்டல்களில் மட்டுமே தங்க முடியும்.

எந்த நேரத்திலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் mobile app பயன்பாட்டை பதிவிறக்கம் செய்துவைத்திருக்க வேண்டும் எந்த நேரத்திலும் இருப்பிடங்களைக் கண்டறிய இது உதவும். என்று அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அவற்றில் அன்றாட வெப்பநிலை பற்றிய அறிக்கைகளைப் பெறுவதற்கும், புறப்படும் போதும், அவர்கள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply