சீ-4 வெடிமருந்தை திருடியவர்களால் முகமாலையில் பதற்றம்; இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல்..!

முகமாலை பகுதியில் உள்ள கண்ணிவெடியகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்து சீ-4 வெடிமருந்தை திருடிய இருவரை காவலாளி கண்ட நிலையில் வெடிமருந்தை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த படையினர் வெடிமருந்தை மீட்டுள்ளதுடன், தப்பி ஓடிய திருடர்களை தேடும் பணியை முடுக்கி விட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு திருடர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால் குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கும் ராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சோதனையிட்டனர்.

அப்போது குறித்த மூட்டைக்குள் இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply