பல்கலைகழக மாணவியுடனான காதல் உறவு முறிந்த சோகத்திலேயே புலனாய்வு உத்தியோகத்தர் தற்கொலை..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது, காதல் தோல்வியினால் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தரே தற்கொலை செய்து கொண்டார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் அண்மையில் பணியில் இணைந்தவர்.

சம்பவதினமான நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் பயிலும் மாணவியொருவருடன் அவர் காதல் தொடர்பில் இருந்ததும், அந்த உறவு முறிந்த விரக்தியிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.

Be the first to comment

Leave a Reply