வோட்டுக்காக தமது மதத்தை தாமே இழிவு படுத்தி ஆலய சிலைகளை உடைக்கும் சைவ மக்கள் கட்சி..! அதிரும் உண்மை..!

மன்னார்-யாழ் பிரதான வீதி,தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.


குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.


அதே நேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு  நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த சிற்றாலயமானது தொடர்சியாக இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த விடையம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதே வேளை இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து வெளியிடும் போது சில வருடங்களுக்கு முன்னரும் இதே போன்ற செயற்பாடுகள் இடம்பெற்ற போதும் குறிப்பிட்ட நபர்களை தாம் இனங்கண்டு எச்சரித்தமையால் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மோதல்கள் தவிர்க்கப்பட்டதாகவும் தற்போது தேர்தல் நெருங்கி உள்ளமையால் புதியதாக தேர்தலில் போட்டியிடும் சைவ மக்கள் கட்சி என்ற சிவசேனா அமைப்பினால் வழி நடாத்தப்படும் அமைப்பே இவ் தாக்குதலை மேற்கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார்.

இவர்கள் இந்திய சக்திகளை இலங்கைக்குள் தாக்கம் செலுத்த வைப்பதற்காகவும் மற்றும் போர் முடிவடைந்ததால் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாலும் பிரித்தாழும் சூழ்ச்சி இன்னும் சற்று காலத்தில் இங்கு செல்லுபடியற்றதாக போய்விடும் என்பதாலும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களிடையே மத வன்முறை போக்குகளை தூண்டி இன ஒற்றுமையை சீர் குலைத்து இந்திய ஆதிக்கத்தை வடக்கில் இன்னும் அதிகமாக காலூன்ற செய்வதற்காக செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும் வெகு விரைவில் சூத்திரதாரியை தாங்களே பிடித்து பொலிஸில் ஒப்படைப்போம் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply