தென்மராட்சியில் ர. சசிகலாவை இழிவாக விமர்சித்த கே. சயந்தன்..! ‘ஓட்டப்பம் வீட்டைச்சுடும்’ – கூட்டமைப்பில் சலசலப்பு..!

சயந்தன் திருமதி ச சிகலா ரவிராஜ்ஜை இழிவாக விமர்சித்து மேடையில் விழித்தமையால் மனமுடைந்து வெளியேறிய சம்பவம் நடைபெற்றுள்ளது., இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

எனக்கு நேற்று நேர்ந்த எதிர்பாராத சம்பவம்!! அன்பான மக்களே உங்களிடம் சில நிமிடங்கள்….

நேற்றைய தினம் சாவகச்சேரி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

பொது மேடையில் சபை நடைமுறை தெரியாமல் நடந்து கொண்ட சயந்தன்

என்னை பேசுவதற்கு அழைக்கும் போது கே.சயந்தன் நடந்து கொண்ட விதம் மனதிற்கு வேதனையைத் தருகிறது.

சபை நாகரீகம் தெரியாது நடந்து கொள்வது மிக வேதனையானது.

அவர் கூறும் நபரை ஆதரித்து என்னால் வேலை செய்ய முடியாது

என்னுடைய கணவன் மிக துணிச்சலானவர் மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர் இப்படியான ஒருவரின் மனைவியான நானும் அவரின் பாதையில் பயணிக்க சயந்தன் பல முட்டக் கட்டைகளை போடுவதுடன் எனக்கும் என் தொகுதி மக்களிற்கும் எதிரான நபரை என்னால் ஆதரிக்க முடியாது.

எமது கட்சித் தலைமை மதிப்புக்குரிய மாவை ஐயாவின் வழிநடத்தலில் தொடர்ந்து பயணிக்க என்னால் முடியும்.

விடுதலைப் போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாட்டுடன் இருப்பவர்களுடன் என்னால் பயணிக்க முடியாது.

  • சசிகலா ரவிராஜ்

Be the first to comment

Leave a Reply