முகமாலைப்பகுதியில் இராணுவம் துப்பாக்கிச்சூடு..!

கிளிநொச்சி முகமாலை – கிளாலிப்பகுதியில் கள்ளமணல் ஏற்றிச்சென்றவர்கள்மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மைக்காலமாக முகமாலை – கிளாலிப் பகுதியில் கள்ளமணல் எடுப்பது அதிகரித்திருப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply