22ம் திகதி முதல் பஸ்களுக்கு புதிய ஒழுங்கு முறைகள் அமுல்..!

பொரளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறையை அமுல்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பொரளை முதல் மருதானை ஊடாக புறக்கோட்டை வரை பஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க கப்புகொட தெரிவித்தார்.

கடந்த 8 ஆம் திகதி முதல் மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை வரையில் பஸ்களுக்கு பிரத்தியேக வீதி ஒழுங்குமுறை அமுல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக , அலுவலக ஊழியர்கள் 20 அல்லது 30 நிமிடங்களுக்குள் அலுவலகங்களுக்கு செல்ல முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

Be the first to comment

Leave a Reply