இலங்கையில் கொரோணா நோயாளிகளைக் கண்டு பிடிக்க மொபைல் செயலி கண்டுபிடிப்பு..!

கொரோனா தொற்றாளர்களை இனங்காண, கைப்பேசி செயலி ஒன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனம் கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால், கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசி செயலி ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தொலைவில் வைத்தே இனங்காண முடியுமென அப்பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளர்களை இனங்காணுவதற்காக இந்த செயலி ஊடாக பல செயற்பாடுகளை முன்னெடுக்ககூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த செயலியை வேறு நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பேராசிரியர் சந்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply