இலையுதிர் காலத்தில் கொரோனா 2வது அலை பரவல் ஆரம்பிக்கும் – உலக சுகாதார நிறுவனம்..!

லையுதிர் காலத்தில் கொரோனா 2-வது அலைக்கு சாத்தியம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலை, இலையுதிர் காலத்தில் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது என கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது,

கொரோனா வைரஸ் தொற்று குறையத்தொடங்கி உள்ள நாடுகளில், கோடையில் இது நீடிக்கும். ஆனால் இலையுதிர் காலம் தொடங்கும்போது 2-வது அலையை எதிர்பார்க்கிறோம்.

இன்புளூவன்சா காய்ச்சலும் வரும். இருப்பினும் இது குறித்து உறுதியாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply