மீண்டும் பிரித்தானியாவில் ஒரு கொரோனா பரவல்: இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூடல்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் மூன்றாவது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்பட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

briton

மேற்கு யார்க்ஷையரிலுள்ள Kober Ltd என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, வேல்ஸிலுள்ள இரண்டு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், இது பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையாகும்.

அங்கு 100 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், லிவர்பூல் பல்கலைக்கழக நோய்த்தொற்று பிரிவு பேராசிரியரான Calum Semple, இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொரோனா பரவ ஏற்ற சூழல் கொண்டவையாகும் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி முதலான நாடுகளிலும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply