தேர்தலின் பின்னரான தமது நிலையை முற்கூட்டி காண்பிக்கும் கூட்டமைப்பு; தெருக்களில் வீடு..!

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை மிகக் கேவலமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

உரும்பிராய் ,ஊரெழு புன்னாலைக்கட்டுவன் சுண்ணாகம் பகுதிகளில் புதிய காப்பெற் வீதிகளில் கூட்டமைப்பின் வேட்பாளர்களான சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோரது இலக்கங்கள் சின்னத்துடன் வீதியில் வரையப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆபத்து மிகுந்த சந்தியான உரும்பிராய் சந்தியில் பாரியளவில் இது வரையப்பட்டுள்ளது அதுமட்டுமன்றி பலாலி வீதியின் ஒவ்வொரு ஒழுங்கைளும் பிரதான வீதியில் சந்திக்கும் சந்திகளில் இவ்வாறு கீறப்பட்டுள்ளன.

இலங்கை தேர்தல் சட்டத்தின்படி சுவரொட்டிகள் ஒட்டவும் இவ்வாறான மக்களைப் பாதிக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவும் அனுமதி இல்லை இருந்த போதிலும் நேற்று இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் பல மணி நேரங்கள் செலவழித்து பிரதான வீதிகளின் சந்திகளில் இவ்வாறு போக்குவரத்தை தடை செய்து இவை வரையப்பட்டுள்ளது.

இதற்கு பொலீசாரும் தேர்தல் திணைக்களமும் உடந்தையாகஉள்ளதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படவேண்டியவர்கள்.

எந்த ஒரு அடிமட்ட கட்சி கூட இவ்வாறு செய்ய மாட்டாது என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் முக்கியமான இவ்வாறான போக்குவரத்து பாதைகளில் வீதி குறியீடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறு 50 மீற்றர் இடைவளியில் வீதியில் வரைவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை இடமளித்ததா அல்லது தேர்தல் திணைக்களம் அனுமதியளித்ததா.

பொதுமக்கள் பயன்படுத்தும் இவ்வாறான பொது சொத்தாகிய பிரதான வீதிகளில் யாரின் அனுமதியுடன் இதனைச் செய்தார்கள் இதனால் ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வீதிகளில் கண்ட கண்ட குறியீடுகளை வரையும் காவாலிகள் கூட இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர் இவ்வாறான கேவலமான ஒரு கலாச்சாரத்தை கூட்டமைப்பு ஆரம்பித்திருப்பது அவர்களின் தேர்தல் பண்பினை வெளிக்காட்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply